முதலில் நீங்கள் தொடர்பு கொண்டு பேசும் போது உங்கள் வரன் மற்றும் உங்களின் (பெற்றோர்கள்/அப்பா, அம்மா) பெயர் ஊர், பரிந்துரைத்தவர் பெயர், உங்களின் சொந்த வாட்ஸ்அப் எண்(பெயருடன்) ஆகியவற்றை உங்களிடமிருந்து SMS மூலமாக கேட்டு பெறப்பட்டு, உங்களை வாட்ஸ்அப் குரூப்பில் செய்தி பரிவர்த்தனைக்காக இணைக்கப்படும்.அவ்வாறு வாட்ஸ்அப் குரூப்பில் இணைந்ததும் உங்கள் வரனின் ஜாதகம், பயோடேட்டா, ஃபோட்டோ (மொபைல் எண்ணுடன்) ஆகியவற்றை மிகத் தெளிவாக தனியாக வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.
தங்களின் ஜாதகம் கிடைத்ததும், நூறு சதவீதம் பாதுகாப்பு கருதியும், ஜாதகங்களை தவறாக பயன்படுத்தக்கூடாத வகையிலும் பெற்றோர்களின் மொபைல் எண்ணை வெப்சைட்டில் பதிவு செய்யப்படும்.
அவ்வாறு நீங்கள் இணைந்த பிறகு உங்களுக்கு ஒரு லிங்க் (பரிவர்த்தனை எண்) அனுப்பப்படும். அந்த எண் மூலமாக வெப்சைட் திறக்கப்பட்டு அதில் ஜாதகங்களை பெற்றுக் கொள்ளலாம்.
