உலகம் முழுவதும் உள்ள அனைத்து செங்குந்த சொந்தங்களுக்கும் எனது அன்பான வணக்கம்.கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக வர்த்தகத் துறையில் இருந்து கொண்டும்…தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் உட்பட பல்வேறு சமுதாய பணிகளோடு பயணிக்கும் போது கிடைக்கப் பெற்ற நட்பும், உறவின் பயன்பாடே இந்த முற்றிலும் இலவச திருமண பரிவர்த்தனை.
இந்த முற்றிலும் இலவச சேவை ஆரம்பத்தில் மெயில் மூலமாகவும், பிறகு வாட்ஸ்அப் மூலமாகவும் பல வருடங்களாக தொடர்ந்து செயல்பட்டு வந்தது.தற்போது பல்வேறு தொழில் நுட்ப கோளாறுகளை சந்திக்க நேரிட்டதால் இதற்கு மாற்றாக இந்த சேவையை மேலும் விரிவாக்கம் செய்தும் எளிமையாகவும் பாதுகாப்பாகவும் உலகம் முழுவதும் உள்ள அனைத்து முதலியார் சொந்தங்கள் பயன் பெறும் வகையில் இதற்கான குறிப்பிட்ட நேரம், காலம் நிர்ணயம் செய்து தற்போது… www.rmohanramthirumanasevai.com என்ற பெயரில் புதுப்பொலிவுடன் வெப்சைட்டில் வெளிவருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.